நாக்கு பயிற்சி:
உலகெங்கிலும், பலர் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுகிறார்கள், மேலும் பலர் அவற்றைத் பின்பற்றுவதில் தடுமாறுகிறார்கள். ஆகினும், ஒவ்வொருவரும் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்கவும் நீண்ட காலம் வாழவுமே விரும்புகிறார்கள்.
ஆனால் உணவு மற்றும் உடற்பயிற்சியை விட முக்கியமான ஒன்று நாவு பயிற்சியாகும். அதாவது நாம் பேசும் வார்த்தைகளை கட்டுப்பாடோடு பேசுவது. நாம் என்ன பேசுகிறோம் என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும், ஏனென்றால் நம்முடைய பல முயற்சிகளை வீணாக்கும் சக்தி நாவுக்கு உண்டு.
நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சிகளைச் செய்து நல்ல ஆரோக்கியமான சரீரத்தை உருவாக்கலாம், ஆனால் உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அடிக்கடி எதிர்மறையான வார்த்தைகளை உச்சரிப்பீர்களானால், அதாவது கீழே உள்ள வார்த்தைகளைப்போல்:
” நான் செத்தா நல்லாயிருக்கும்” “எனது குடும்பத்தில் யாரும் நீண்ட நாட்கள் வழ்ந்தது இல்லை, ஆகையால் நானும் மரித்து விடக்கூடும்” “என் அப்பா/அம்மாவுக்கு சர்க்கரை நோய் உள்ளதால் எனக்கும் வரும்” “எனக்கு பெரிய பிரச்சனை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது” “நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் என் உடல் எடையை குறைக்கத் தவறிவிடுவேன்” போன்றவை.
யாக்கோபு 3:6, “நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!” என்று கூறுகிறது.
என் அன்பான நண்பர்களே, நம் நாக்கு நெருப்பு போன்றது, யாரும் நெருப்புடன் விளையாடுவதில்லை, ஏனென்றால் அது அவர்களை சுட்டுவிடும். எனவே உங்கள் நாவுடன் விளையாடாதீர்கள், குறிப்பாக உங்களைப் பற்றியோ அல்லது யாரைப் பற்றியோ எதிர்மறையான அல்லது மனச்சோர்வடையத்தக்க அறிக்கைகள், வார்த்தைகள் அல்லது நிஜ சூழ்நிலைகளைப் பேசாதீர்கள். இதனால் பல உடல்நலப் பிரச்சினைகளைலிருந்தும் ஆபத்துக்களில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
நாவைப் பயிற்றுவிப்போம்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!