அசைக்கப்படுவதில்லை

மாம்சம், உலகம், பிசாசு, இந்த மூன்றும் எப்போதும் நம்மை அசைக்க முயற்சி செய்கின்றன. மாம்சம் சில சமயங்களில் நோயின் அறிகுறிகளைக் காட்டி நம்மை பயமுறுத்துகிறது, உலகம் சோதனையையும் பிரச்சனைகளையும் கொண்டு வந்து தேவனுடன் இருக்கும் நம் ஐக்கியத்தை கெடுக்க முயற்சிக்கிறது, பிசாசு பல ஆவிக்குரிய பிரச்சினைகளை முயற்சி செய்து நம் விசுவாசத்தை அசைக்க முயற்சிக்கிறான்.

இம்மூன்றையும் நாம் எப்படி மேற்கொள்வது?

கடலில் உள்ள பெரிய கப்பல்களை பாருங்கள், அவை பல புயல்கள், அலைகள் மற்றும் மழைகளால் தாக்கப்படுகின்றன, இருப்பினும், அவைகள் அதை அசைக்க முடிவதில்லை, அதின் மாலுமி அவர் கையில் இருக்கும் சுக்கானை பயன்படுத்தி தான் விரும்பிய இலக்கை அடைகிறார்.

சங்கீதம் 16:8, “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” என்று கூறுகிறது.

என் அன்பான நண்பர்களே, உலகம், மாம்சம் மற்றும் பிசாசு இந்த உலகில் எப்போதும் இருக்கும், அதற்காக நாம் அசைக்கப்படுவோம், நம் இலக்கை அடைய முடியாது என்று அர்த்தமல்ல. நம் தேவனும் அவருடைய வார்த்தையும் நம்மிடம் உள்ளார்கள், அவரைக் கொண்டு நம் வாழ்க்கையை வழிநடத்தினால், நாம் நம் இலக்கை அடைய முடியும், நாம் அசைக்கப்படுவதில்லை.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...