பூரண சமாதானம்:

இந்த உலகம் சில சமயங்களில் சமாதானத்தை அளிக்கிறது. உலகம் சமாதானத்தைக் கொடுக்கும் விதம் எப்படி என்றால் ஒரு நபரை தற்காலிகமாக தனது பிரச்சினையை மறக்கச் செய்வதாகும். சிலர் தங்கள் துன்பத்தை மறக்க திரைப்படங்களைப் பார்க்கிறார்கள், துரதிர்ஷ்டவசமாக, சிலர் தங்கள் பிரச்சினைகளை மறக்க மதுவுக்கு அடிமை ஆகிறார்கள், மேலும் சிலர் தங்கள் பிரச்சனையை நினைப்பதிலிருந்து தப்பிக்க சில பொழுதுபோக்கு காரியங்களில் நேரம் செலவிடுகிறார்கள், இதனால் அவர்கள் தற்காலிக நிவாரணம் பெறுகிறார்கள், ஆனால் அதினால் பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லை.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ தம்மீது நம்பிக்கை வைப்பவர்களுக்கு பரிபூரண சமாதானத்தைத் தருகிறவர், நம் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், அதை ஜெயிக்கவும் உதவுகிறவர், மாற்றங்களைக் கொண்டு வருகிறவர், மனிதர்களால் எதுவும் செய்ய முடியாத காரியங்களில் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை நமக்காக செய்து முடிப்பவர். அவர் நமக்கு சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் கொடுக்க மற்ற எல்லாவற்றையும் மாற்றுகிறவர்.

ஏசாயா 26:3 கூறுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.”

என் அன்பான நண்பர்களே, அவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு அவர்மீது நம்பிக்கை வையுங்கள், நீங்கள் விரும்பும் அந்த பரிபூரண ஆசீர்வாதங்களை சமாதானத்தை அவர் உங்களுக்குத் தந்திடுவார்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...