கர்த்தருக்கு துதி காத்திருக்கிறது
தேவனை உண்மையாக துதிப்பது மிக முக்கியம்; அது நம் வாழ்விலும் குடும்பத்திலும் அவருடைய பிரசன்னைத்தைக் கொண்டுவருகின்றது. குடும்பமாக அவரைத் துதியுங்கள், தனிமையான நேரம் எடுத்துக் கொண்டு அவரைப் புகழ்ந்து, அவருக்காக பாடல்களைப் பாடுங்கள்.
உங்கள் சபையுடன் சேர்ந்து அவரைத் துதியுங்கள். உங்கள் இருதயத்தில் இரவில் படுக்கையில் அவரைத் ஸ்தோத்தரியுங்கள்.
சங்கீதம் 65:1, “தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.” என்று கூறுகிறது.
என் அன்பான நண்பர்களே, நாம் நமது அன்பையும் நன்றியையும் துதிகளின் வாயிலாக வெளிப்படுத்தும்போது அவர் நம்மில் மகிழ்ச்சியடைகிறார். மேலும் அவர் தனது மகிமையினாலும் பிரசன்னத்தினாலும் நம் வாழ்க்கையை நிரப்புகிறார், அது நம்மை வெற்றிக்கு நேராக களிப்பிற்கு நேராக கொண்டு செல்லும்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!