வெளிச்சத்துக்கு எண்ணெய்

ஆசரிப்புக் கூடாரத்தில் ஒரு குத்துவிளக்கு இருந்தது, இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இஸ்ரவேலர்கள் இதற்காக தெளிவான ஒலிவ எண்ணெயை பயன்படுத்தினார்கள்.

யாத்திராகமம் 27:20, “குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக.” என்று கூறுகிறது

என் அன்பான நண்பர்களே, நாம் எப்பொழுதும் வெளிச்சத்தைப் பிரகாசிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார், நாமும்கூட பிரகாசிக்கவே விரும்புகிறோம். சில சமயங்களில் பிரகாசிக்கவும் செய்கிறோம். ஓய்வுநாளில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் ஜெபக் கூட்டங்களின் நாட்களில் நாம் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறோம், அல்லது, குறைந்தபட்சம் நாம் தேவாலயத்திற்குச் செல்லும்போது சிறிதளவு பரிசுத்தத்துடனாவது நடக்கிறோம், எனவே அந்த நேரங்களில் நாம் சிறிது காலம் பிரகாசிப்பதுமுண்டு.

ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அந்த ஒளி மங்குகிறது, அல்லவா? அப்படியானால், நாம் தொடர்ந்து தேவனுடைய வெளிச்சத்தைப் பிரகாசிப்பது எப்படி?

யாத்திராகமம் 39:37, இஸ்ரவேலர்கள் வெளிச்சத்திற்கு எண்ணெயை கொண்டு வந்தார்கள் என்று கூறுகிறது. ஒரு காரியத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும்: நாம் கர்த்தருடைய விளக்குகள், எண்ணெய் அல்ல. பரிசுத்த ஆவியானவர்தான் எண்ணெய், இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெய் அவர்தான். ஆகவே நாம் அவரால் நிரப்பப்படுவோமானால் நாம் எரிந்து கொண்டே இருக்க முடியும், வெளிச்சத்தை எப்போதும் கொடுக்க முடியும்.

ஆகவே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு எரிந்து கொண்டிருப்போம்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...