என்று எழுதியிருக்கிறதே

நம் வாழ்வில் சோதனைக்கான வாய்ப்புகள் இருக்கும்போது அது வருகின்றது. ஆனால் அதனை கடந்து செல்வதற்கும் அதை எதிர்த்து ஜெயிப்பதற்கும் நமக்கு சக்தி இருக்கின்றதா? 40 நாட்கள் உபவாசத்திற்கு பின்பு இயேசு பசியுடனும் சோர்வுடனும் இருந்தபோதுதான் சோதிக்கப்பட்டார்.

தனது வல்லமையைத் தவறாக பயன்படுத்தும்படி சோதிக்கப்பட்டார், மகிமையை அடைய குறுக்குவழியில் செல்லும்படி சோதிக்கப்பட்டார், தேவனுடைய அன்பை சோதித்துப்பார்க்கும்படி சோதனைக்குட்பட்டார்.

ஆனால் இயேசுவோ அனைத்து சோதனைகளையும் ஜெயித்தார். அவரது இந்த வெற்றிக்கான திறவுகோல் என்னவென்றால் அவருக்கு தேவனுடைய வார்த்தையைப் பற்றிய அறிவு இருந்தது. ஒவ்வொரு முறையும் சாத்தான் அவரை தீய எண்ணங்களால் சோதித்தபோது, இயேசு அவனுக்கு தேவனுடைய வார்த்தையிலிருந்து பதிலளித்து, “இப்படியாக எழுதியிருக்கிறதே” என்று கூறினார்.

என் அன்பான நண்பர்களே, தீய எண்ணத்தை புதிய எண்ணத்தால் எளிதில் ஜெயிக்க முடியாமல் போகலாம், ஆனால் அந்த தீய எண்ணங்களுக்கு, தீய சோதனைகளுக்கு எதிராக நமக்குக் கொடுக்கப்பட்ட வேத வார்த்தையை விசுவாசத்துடன் பேசும்போது அதை ஜெயிப்பது மிகவும் எளிதானது.

அதனால்தான் வேத வார்த்தையைப் படித்து அதின் அறிவைப் பெறுவது மிக முக்கியம். வேத வார்த்தைகளை வாசிப்பதிலும், தியானிப்பதிலும், அதின்படி வாழ்வதிலும் உறுதியான முயற்சியை மேற்கொள்வோம்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...