ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு ஏழையின் தேவையைப் பூர்த்தி செய்து பார்த்திருக்கிறீர்களா? அப்படி செய்வதால அவர்கள் முகத்தில் வருகிற சந்தோஷத்தை கண்டிருக்கிறீர்களா? அப்படி காண்பீர்களானால் அது ஒரு இனம்புரியாத திருப்தியையும் சந்தோஷத்தையும் நமக்கு அளிக்கும். அதனால் தேவனும் மகிழ்ச்சியடைகிறார்.

சங்கீதம் 41:1, “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.” என்று கூறுகிறது.

என் அன்பான நண்பர்களே, ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவி அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்ல. தீங்கு நாளில் நமக்கு விடுதலையையும் பாதுகாப்பையும் அது உறுதி செய்கிறது. ஏனென்றால், ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்.

ஆகையால் சிறுமைப்பட்டவர்கள்மேல் சிந்தை கொள்வோம்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக.

You may also like...