பெசலேயேலின் ஞானம்:
இஸ்ரவேலர் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கான கட்டளையைப் பெற்றபோது, மரம், வெள்ளி, வெண்கலம், தங்கம், இரத்தினங்கள், இளநீல நூல் மற்றும் இரத்தாம்பரம் போன்றவற்றினால் பல வகையான கலை மற்றும் விசித்திரமான வேலைகளை செய்யும்படி அவர்களிடம் சொல்லப்பட்டது.
ஆனால் அது எளிதானது அல்ல, இதைத் திறம்பட செய்யவும், அவர்களை வழிநடத்தவும் அவர்களுக்கு நிபுணர்கள் தேவைப்பட்டனர். கர்த்தர் பெசலேலையேல் என்ற மனிதனைத் தெரிந்தெடுத்து, இந்த வேலையைத் செய்வதற்கும் மற்றவர்களை அதில் வழிநடத்துவதற்கும் அவனை ஞானத்தினாலும், புத்தியினாலும், அறிவினாலும் தம்முடைய ஆவியினாலும் நிரப்பினார், அகோலியாபும் அவனோடு அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றவர்களுக்கு அதை போதிக்கும் வரத்தையும் பெற்றனர்.
யாத்திராகமம் 35:30-34 “… “கர்த்தர்…ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும், இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும், அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார். அவன் இருதயத்திலும்… அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.
என் அன்பான நண்பர்களே, நம்மில் பெரும்பாலோர் வேலை அல்லது வியாபாரத்தில் இருக்கின்றோம், கர்த்தர் நம்மை அங்கே வைத்திருக்கிறார், மேலும் கர்த்தர் நம் வேலையை நாம் சிறப்பாகச் செய்ய அவருடைய ஆவியினாலும் ஞானத்தாலும் நம்மை நிரப்புகிறவர், இதனால் அவர் மகிமைப்படுவார்.
ஒரு வேளை உங்கள் வேலையைச் செய்ய உங்களுக்குத் தேவையான ஞானம் இல்லை என்று நீங்கள் நினைப்பீர்களானால், அவரிடம் கேளுங்கள், தேவையான ஞானத்தையும் திறமையையும் நிச்சயம் அவர் உங்களுக்குத் தந்திடுவார்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!