உற்சாகமான காணிக்கை ஏற்கப்படும்
காணிக்கைகளை கொடுக்கும்போது, நமது மனப்பான்மை மிக முக்கியமானது, அதை தேவன் கவனிக்கின்றார், மகிழ்ச்சியுடன் உற்சாகமாய் கொடுப்பவர்களின் காணிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்கிறார்.
அனனியா மற்றும் சப்பீராள் பற்றி நாம் அறிவோம், அவர்கள் ஒரு பெரிய தொகையை காணிக்கையாகக் கொடுத்தனர், ஆனால் விருப்பத்துடன் அல்ல, மாறாக பெயருக்காக அல்லது அவர்களின் பெயர்களை நிலைநிறுத்துவதற்காக அவர்கள் வஞ்சித்துக் கொடுத்தனர்.
என் அன்பான நண்பர்களே, கர்த்தருக்குக் காணிக்கைக் கொடுப்பது முக்கியம், ஆனால் நிர்பந்தத்தின் பேரில் அல்ல, பெயருக்காக அல்ல, கர்த்தர் நம்மை ஆசீர்வதித்திருக்கின்ற அளவிற்கு அல்லது அதற்கும் மேலாக மகிழ்ச்சியுடன் எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுப்பது நல்லது. ஆனால் விருப்பமின்றி கொடுக்கப்படும் எதுவும் தேவனுக்கோ அல்லது நமக்கோ எப்படி ஆசீர்வாதமாக இருக்க முடியும்.
யாத்திராகமம் 25:2, “… மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக.” என்று தேவன் கூறினார்
என் அன்பு நண்பர்களே, மேற்கண்ட வசனத்தின்படி நமக்குக் கொடுக்க மனமில்லையென்றால், நம்மிடம் கேட்கவும் அவருக்கு விருப்பம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்போமானால், நாம் அவரிடம் காட்டிய அன்பின் காரணமாக அவர் நம்மை ஆசீர்வதிக்கவும் பெருக்கவும் வல்லவராக இருக்கின்றார்.
கட்டாயாமாக அல்ல, மனப்பூர்வமாய் கர்த்தருக்குக் காணிக்கைகளை செலுத்திடுவோம்.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!