நம் கண்முன் இருக்கும் நன்மையை காண முடிவதில்லை!
சில தேவையுள்ள அல்லது கஷ்டமான சூழ்நிலைகளில் கடந்து செல்லும்போது, அதற்கான தீர்வை நாம் அங்கும் இங்கும் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம், ஆனால் சில நேரம் பதில் கிடைப்பதில்லை. ஆனாலும் நாம் தேடுகின்ற அந்த விடுதலை அல்லது பதில் நம் கண்முன்தான் இருக்கக்கூடும், நம்மால்தான் அதைப் பார்க்க முடிவதில்லை.
இஸ்மவேல் ஆபிரகாமிடம் இருந்து அவனுடைய தாய் ஆகாருடன் அனுப்பிவிடப்பட்டபோது பாலைவனத்தில் மரணம் உண்டாகும் அளவிற்கு இஸ்மவேல் தாகம் அடைந்தான், அவள் இஸ்மவேலைக் காப்பாற்ற தண்ணீரைத் தேடினாள், அவள் கண்ணுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை, தன் மகன் மரிப்பதை நாம் காண்பதில்லை என்று அவள் கதறி அழுதாள், தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டு ஆகாரின் கண்களைத் திறந்து அவளுக்கு அங்கே இருந்த தண்ணீர் துரவைக் காண்பித்தார், இஸ்மவேல் காப்பாற்றப்பட்டான்.
ஆதியாகமம் 21:19, “தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.”
என் அன்பான நண்பர்களே, நமக்கு நெருக்கமான சூழ்நிலைகளில் உதவி கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைவதற்கு பதிலாக, கர்த்தரை நோக்கி கூப்பிடுவது நல்லது. ஏனென்றால் சில நேரங்களில் சூழ்நிலையின் மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக நம் அருகில் இருக்கும் பதிலை நம்மால் பார்க்க முடிவதில்லை, ஆனால் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நம் கண்களைத் திறப்பார், அப்போது நமக்கு மிக அருகிலேயே இருக்கும் அந்த பதிலை, அந்த அற்புதத்தை நாம் அடைய முடியும்.
கர்த்தர் நமக்காக ஆயத்தம் செய்துள்ள அனைத்து நன்மைகளையும் காண அவர் நம் கண்களைத் திறப்பாராக.
உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!