நம் வார்த்தைகளில் பாவம்

நமக்கு அதிகம் பழக்கமில்லாத ஒருவருடன் நாம் அமர்ந்திருக்கும்போது, சிறிது நேரம் கழித்துப் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து அமைதியாகி விடுகிறோம். ஆனால் நாம் நமது நண்பர்களுடன் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் இருக்கும்போது நிறைய பேசுவோம். குறிப்பாக நாம் உற்சாகமாக இருக்கும்போது, நாம் மிகவும் அதிகமாக பேசுவதுண்டு. அல்லவா?

சமீபத்தில், எங்கள் வீட்டில் நடந்த ஒரு வைபோகத்தின் போது, குடும்பத்தில் உள்ள வயதில் மூத்த நபர் ஒருவர் உற்சாகத்தில் திடீரென்று ஒரு வார்த்தையைக் கூறினார் அது மற்றொரு நபர் மனதை புண்படுத்தி சந்தோசமாக இருக்க வேண்டிய அந்த தருணங்கள் மிகவும் பனிப்போராக மாறிவிட்டது.

நீதிமொழிகள் 10:19, “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.” என்று கூறுகிறது.

என் அன்பான நண்பர்களே, தேவ மனிதர்கள் உட்பட பலரும் தோல்வியடையக் கூடிய ஒரு பெரிய சோதனை என்னவென்றால் தாங்கள் தங்கள் தோழர்களுடன் இருக்கும்போது நகைச்சுவையாகவோ அல்லது கரடுமுரடானதாகவோ பேச வேண்டும் என்று வருகிற விருப்பமே ஆகும். ஆனால் அப்படிப் பேசும்போது அதில் பாவம் இல்லாமல் இருப்பதில்லை. ஆகவே அவ்வாறு பேசாமல் இருக்க தேவன் நமக்கு ஞானத்தைத் தருவாராக.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...